உன்னையும் மறப்பதுண்டோ பாடல் வரிகள் | Unnaiyum Marapathundo Lyrics
உன்னையும் மறப்பதுண்டோ என்ற முருகன் பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறோம்
உன்னையும் மறப்பதுண்டோ பாடல் வரிகள்
உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ? முருகா !!
உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ?
பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ மறந்தால் மலரும் மணமும் உண்டோ? முருகா !!! நான்
உன்னையும் மறப்பதுண்டோ ?
கண்ணையும் மறந்திருப்பேன்
கையுடன் கால்களும் மறந்திருப்பேன் முருகா !!!
எண்ணத்தின் ஒளிச்சுடரே
எண்ணத்தின் ஒளிச்சுடரே
உன்னை எப்படி நான் மறப்பேன் !
நான் உன்னையும் மறப்பதுண்டோ !
பொன் பொருள் மறந்திருப்பேன்
இகழும் புகழும் மறந்திருப்பேன் முருகா !
என்னுயிர் ஆன உன்னை
என்னுயிர் ஆன உன்னை
மறந்தால் எவ்விதம் வாழ்ந்திருப்பேன் ?
நான் உன்னையும் மறப்பதுண்டோ ?
நீந்திய நதி மறப்பேன்
வீடும் நிலமும் மறந்திருப்பேன்
வடிவேல் ஏந்திய உனை மறந்தால்
நான் ஏந்திய உனை மறந்தால்
உலகில் எத்தனை நாள் இருப்பேன் ?
உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ ?
பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ மறந்தால் மலரும் மணமும் உண்டோ ? முருகா !! நான்
உன்னையும் மறப்பதுண்டோ ?