அம்மன் பாடல்கள்பக்தி பாடல்கள்

மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல் வரிகள்

மஞ்சளிலே நீராடி குங்குமத்தால் பொட்டு இட்டு என்ற அங்காளம்மன் பஜனை பாடல்களை பாடி கேட்டு மகிழ்ந்து அம்மன் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல் வரிகள் – Angalamma Song Lyrics in Tamil

மஞ்சளிலே நீராடி குங்குமத்தால் பொட்டு இட்டு
பூவாடைக் காரியம்மா அம்மா நீ மருளாடி வந்திடம்மா

உடுக்கை பம்பை முரசொலிக்க உருமி மேளம் தான் ஒலிக்க
சித்தாங்கு ஆடை கட்டி தாயே நீ சீறி எழுந்திடம்மா

மேல் மலையனூரில் கோயில் கொண்ட
என் அங்காள ஈஸ்வரியே ஆத்தாளே அழைக்கின்றேன்
ஆடி இங்கு வந்திடம்மா நீ வந்திடம்மா…

மேல்மலையனூரு அங்காளியே !
மாக்காளி திரிசூலியே !
மேல்மலையனூரு அங்காளியே !
மாக்காளி திரிசூலியே !

குறி சொல்ல வந்திடம்மா !
எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா !

மலையனூரு அங்காளியே
மாங்காளி திரிசூலியே
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
தெய்வமம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே தாயே .

சித்தாங்கு ஆடைகட்டி, நீ சிங்கரதம் மீதேறி
சித்தாங்கு ஆடைகட்டி, நீ சிங்கரதம் மீதேறி
தேரோடும் வீதியிலே, தாயே நீயாடி வந்திடம்மா .

அந்தரியே சுந்தரியே எங்க அங்காள ஈஸ்வரியே
அந்தரியே சுந்தரியே எங்க அங்காள ஈஸ்வரியே
ஆடி வரும் தேரினிலே
நீ அழகாக வருபளே அம்மம்மா.

மலையனூரு அங்காளியே மாக்காளி திரி சூலியே
குறி சொல்ல வந்திடம்மா எங்கள் குலம் காக்கும்
தெய்வமம்மா அமம்மா …..,,

மலையனூரு அங்காளியே மாங்காளி திரி சூலியே
குறி சொல்ல வந்திடம்மா எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா மலையனூரு அங்காளியே

ஆலய வாசலிலே அலங்காரத் தோரணமாம் .
அங்காள ஈஸ்வரிக்கு அபிஷேக பூஜைகளாம் .

ஆடிவரும் தேரினிலே
அம்மா நீ அசைந்து வரும் கோலமம்மா
ஆயிரம் கண்கள் கொண்டவளே
எங்க அங்காள ஈஸ்வரியே …!!

திருவிளக்கின் ஒளியினிலே
தாயே திருவாக்கு சொல்லிடம்மா,
திருவிளக்கின் ஒளியினிலே
தாயே திருவாக்கு சொல்லிடம்மா,

மாவிளக்கின் ஒளியினிலே
தாயே மங்கைக் குறி சொல்லிடம்மா,

மாங்கல்யம் காத்திடம்மா
இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா
மாங்கல்யம் காத்திடம்மா
இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா

மலையனூரு அங்காளியே
நீ மருளாடி வந்திடம்மா அம்மம்மா..
மலையனூரு அங்காளியே மாக்காளி திரிசூலியே
குறி சொல்ல வாடியம்மா
எங்கள் குலம் காக்கும்
தெய்வமம்மா அம்மம்மா…!

மலையனூரு அங்காளியே மாங்காளி திரிசூலியே
குறி சொல்ல வந்திடம்மா எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா !

மலையனூரு அங்காளியே மாக்காளி திரிசூலியே
மேல்மலையனூரு அங்காளியே மாக்காளி திரி சூலியே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *