கார்த்திகை தீப விரதம் | karthigai viratham in tamil
கார்த்திகை தீப விரதம்
கார்த்திகை மாத வளர்பிறை கார்த்திகை நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. அன்று விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி அகல் விளக்கிற்கு பூஜை செய்து அதன்பிறகே உணவு உண்ண வேண்டும்.கார்த்திகை அன்று பகலில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும், கார்த்திகை அன்று மாலையில் வீட்டியிருக்கும் எல்லா திருவிளக்குகளையும் ஏற்ற வேண்டும். வாசலில் சிறுவிளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். இந்த தீபச்சுடர்கள் எங்கும் பிரகாசிப்பதைக் காணும் போது மகிழ்ச்சி பெருகுவதுடன் பக்தியும் சுரக்கும்.