வைகுண்ட ஏகாதசி விரத முறை – ஏகாதசி விரத சிறப்பு
வைகுண்ட ஏகாதசி விரத சிறப்பு
மார்கழி மாதம் வருகின்ற வைகுண்ட ஏகாதசியும் விசேஷ பலனைத் தரும் அரியதோர் விரதமாக அமைந்துள்ளது இம்மங்கல நாளன்று முழு உபவாசமிருந்து வைகுண்ட நாதனின் சேவடி கமலங்களைத் துதிக்க வேண்டும். நமது பக்திக்கு ப்ரீதியான பக்த பராதீனனான ஸ்ரீமத் நாராயணன் நமக் வைகுண்ட வாசத்தை கடாக்ஷித்து கிருபை செய்கிறார். மூன்று கோடி ஏகாதசிகளை அனுஷ்டித் பலன்களைப் பெறும் பாக்கியத்தை அருளுகிறார் அனந்தன்! எனவே வைகுண்ட ஏகாதசி “”முக்கோடி ஏகாதசி” என்றும் கூறுவர். இது 3 கோடி ஏகாதசிக்கு சமமாகும். அன்று வைணவ கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும். சொர்க்க வாசல் திறப்பது என ஐதிகம்.
வைகுண்ட ஏகாதசி விரதம் முறை
துயிலெழுந்து ஜப தபங்களை முடித்து அன்றைய தினம் முழுவதும் பூரண உபவாசம் அனுஷ்டிக்க வேண்டும்.
இரவெல்லாம் கண்விழித்து புராண நூல்களைப் படிப்பதும் பகவான் நாமாக்களைச் சொல்வதுமாக இருக்க வேண்டும். மறுநாள் குளித்து முன்போல் ஜபங்களை முடித்து, ஓம் நமோ நாராயணா” என்று சொல்லியவாறு துளசி தீர்த்தத்தை உள்ளுக்குள் பருகவேண்டும்.
துவாதசி
ஏகாதசிக்கு மறு தினத்தை துவாதசி என்பர். துவாதசியன்று உணவு அருந்துவதை பாணை” என்று கூறுவர்