Vaikasi Visakam – வைகாசி விசாகம் சிறப்புகள்
வைகாசி விசாகம்
வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். சித்ரா பௌர்ணமிக்கு அடுத்து வரும் பௌர்னமியானது விசாக நட்சத்திரத்தில் வருவதால்தான் மாதத்திற்கே வைகாசி என்று பெயர் வந்தது. விசாகம் ஞான நட்சத்திரம் என்ற பெயரும் உண்டு, 27 நட்சத்திரத்தில் விசாகமும் ஒன்று.
விசாக நட்சத்திர சிறப்பு
முருகன் அவதரித்தது விசாக நட்சத்திரத்தில்தான். எனவே முருகனுக்கு விசாக பெருமான் என்ற பெயரும் உண்டு.சூரபத்மன் போன்ற அசுரர்களின் கொடுமையை தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். உடனே சிவன் அவர்களை காக்க தனது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்தார். அந்த தீப்பொறிகள் வாயுஅக்னி முதலிய தேவர்கள் மூலம் கங்கையில் கொண்டுவிடப்பட்டன. கங்கையோ அதை சரவணப்பொய்கையிலே சேர்த்தது. இங்கு வந்து சேர்ந்ததும் ஆறு தீப்பொறிகளும் வைகாசி விசாகத்தன்று 6 குழந்தைகளாக மாறின.
விஷ்ணு பகவான் கார்த்திகை பெண்கள் மூலமாக அக்குழந்தைகளுக்கு பாலூட்டுவித்தார். இவ்வாறு ஆறுமுகம் கொண்ட முருகன் தோன்றி தேவர்களை காத்தார். நம்மாழ்வாரும் விசாகத்தில்தான் பிறந்திருக்கிறார். வைகாசி விசாகத்தன்றுதான் வடலூரில் ராமலிங்க வள்ளனர் சத்திய தர்மசாலையை துவங்கினார். பத்தர் தோன்றியது, ஞானம் பெற்றது, நிர்வானம் அடைந்தது எல்லாமே வைகாசி பவுர்ணாமியில்தான். இதைத்தான் பூர்ணிமா என கொண்டாடுகின்றனர். இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும். பிரம்மோற்சவமும் நடைபெறும். இத்தினம்
பல சமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும், வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருச்செந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும்.