மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?
மகா சிவராத்திரி விரதம்
சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ?
சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்போர் சிவராத்திரி அன்று வைகறைத் துயிலெழுந்து திருநீறு அணிந்து, உருத்திராட்ச மாலைகள் தரித்து. சிவபூஜை செய்து நம சிவாய நம சிந்தையோடு ஆலயம் செல்ல வேண்டும்.
கோயிலை 108 முறை வலம் வரவேண்டும். எம்பெருமானுக்கு நான்கு காலங்களிலும் நடைபெறும் விசேஷ பூஜைகளைக் கண்டுகளிக்க வேண்டும். சிவ வில்வதளம், அபிஷேகத்திற்காக நெய், தயிர், பால், தேன் மற்றும் பூஜைக்காக கரும்பு, இளநீர், சந்தனம் முதலியவைகளை க்ஷேத்ரங்களுக்குக் கொடுக்க வேண்டும். அன்றைய தினம் முழு உபவாசம் இருக்க வேண்டும். அதற்கு இயலாதவர்கள் சத்துமாவை வெல்லத்துடன் கலந்து ஒரே ஒரு வேளை உட்கொள்ளலாம் அல்லது வள்ளி கிழங்கை உப்பில்லாமல் வேக வைத்து உண்ணலாம். நான்காவது கட்ட பூஜை முடியும் பொழுது மறுநாள் பொழுது புலர்ந்துவிடும். உடனே சென்று நீராடி, சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
சிவராத்திரி விரத பயன்
இத்தகைய சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு சகல சித்திகளும் கிட்டும். சகல சௌபாக்கியங்களும் பொங்கும்.
சிவராத்திரி விரத மகிமை
திருவைகாவூரில் சுச்வான் என்ற வேடன் மானை வேட்டையாடி வீடு திரும்ப முடியாமல் புலிக்கு பயந்து ஒருமரத்தின் மீது ஏறி அமர்ந்தான். என்ன செய்வது என்றே தெரியாமல் வீட்டை நினைத்து அழுதபடி மரத்தின் இலையை கிள்ளி கீழே போட்டபடி இரவு முழுவதும் விழித்திருந்தான். பசியும், தாகமும் அவனை வாட்டின; பொழுதும் விடிந்தது. வீட்டிற்கு செல்லும் வழியில் மானை விற்று வீட்டிற்கு தேவையான உணவை வாங்கினான். வழியில் வந்த பிச்சைகாரனுக்கும் உணவு அளித்தான், மரணத்தருவாயில் சிவதூதர்கள் சுச்வரனை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். வேடனான என்னை சிவலோகத்திற்கு என் அழைத்துச் செல்கிறீர்கள் என காரணம் கேட்டான். அதற்கு சிவதூதர்கள் சிவராத்திரி இரவில் நீ இருந்த வில்வமரத்தின் கீழே ஒரு சிவலிங்கம். இருந்திருக்கிறது. நீ உனது குடும்பத்தை நினைத்து அழுத கண்ணீர் சிவனை அபிஷேகமாக நனைத்துள்ளது. கிள்ளிப்போட்ட வில்வ இலையோ சிவனை அர்ச்சனை செய்ததுபோல் இருந்தது. பசியுடன் விழித்திருந்ததோ சிவனுக்குரிய விரதம் போல் இருந்தது. இவ்வாறு நீ என்ன செய்கிறோம் என தெரியாமலேயே சிவரத்திரி விரதம் இருந்திருக்கிறாய் என கூறினார்கள். இதனாலேயே சுச்வான் என்ற வேடன் மறுபிறவியில் சித்திரபானு என்ற மன்னனாக பிறந்துள்ளான். தெரியாமல் செய்ததற்கே, வேடனை மறுபிறவியில் சித்திரபானு மன்னனாக பிறக்க வைத்தார் இறைவன். நாமும் தெரிந்தே முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து இறைவனின் பரிபூரணா அருளைப்பெறுவோமாகப்