மங்கள ரூபிணி பாடல் வரிகள் | Mangala roopini lyrics tamil
Mangala Roobini lyrics in tamil
ஸ்ரீ துக்க நிவாரண அஷ்டகம் பாடல் வரிகள் – Mangala Roopini lyrics tamil பாடளை வாசித்து அம்மனின் அருளை பெறுவோம்.
துர்கா தேவி சரணம் மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே: சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே: கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே: ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 1 கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்: தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்: மானுறு விழியால் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்: ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 2 சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே: பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே: எங்குலத் தழைத்திட எழில்வடி வுடனே எழுந்தநல் துர்க்கையளே: ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 3 தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்: கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்: பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்: ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 4 பஞ்சமி பைரவி பர்வத புத்திரிபஞ்சநல் பாணியளே: கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்தநல் குமரியளே: சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே: ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 5 எண்ணிய படிநீ யருளிட வருவாய் எங்குல தேவியளே: பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்: கண்ணொளி யதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே: ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 6 இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை யென்றுநீ சொல்லிடுவாய்: சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்: படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்: ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 7 ஜெயஜெய பாலா சாமுண் டீஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி: ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபர மேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி: ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி: ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 8