வெற்றி தரும் விஜயதசமி வழிபாடு
விஜயதசமி
விஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்
ஒன்பது நாள்கள் மகிஷாசூரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி வெற்றி தருகிற பத்தாம் நாள், பல குழந்தைகளின் வித்யாரம்பம் இந்த நாளில்தான் ஆரம்பம் செய்கின்றனர். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம்.
நவராத்திரி பத்து நாள்களும் வழிபாடு செய்ய முடியாதவர்கள் சப்தமி, மகா அஷ்டமி, மகா நவமி ஆகிய மூன்று நாள்களில் மட்டுமாவது (7, 8, 9-வது நாட்கள்) தேவி வழிபாடு செய்யலாம். அதுவும் முடியாதவர்கள் மகா அஷ்டமி (8-ஆம்) நாளன்று நிச்சயம் தேவி வழிபாடு செய்ய வேண்டும்.
வடஇந்தியாவில் உத்திரபிரதேசத்தில் “ராம்லீலா” என்றும், வங்காளிகள் காளி, துர்கா பூஜை என்றும் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் பொம்மை கொலு வைத்து பத்து தினமும் கொண்டாடுகின்றனர்.
வெற்றி தரும் விஜயதசமி பூஜை
நவராத்திரியின் போது சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்தால் பூர்வ ஜென்ம பலன் கிடைக்கும் என்பது ஐதிகம், ஒருசிலர் முதல் நாள் ஒர் கன்னிப்பெண், இரண்டாவது நாள் இரண்டு கன்னிப்பெண் என்று ஒன்பது தினங்களிலும் கன்னிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து உணவிட்டு புது துணி வாங்கி கொடுக்கின்றனர். பிரதி தினம் லலிதா சஹஸ்ர நாமமும் நவராத்திரி அன்று சரஸ்வதி அஷ்டோத்திரமும் பாராயனாம் செய்ய வேண்டும். விஜயதசமி அன்று பூஜையில் வைத்துள்ள புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டும். கல்வி செல்வம் பெருகுவதாக ஐதீகம்.