இந்து தமிழ் பண்டிகைகள் - Important Tamil Festivals List

தமிழ் புத்தாண்டு சிறப்பு | Tamil Puthandu
தமிழ் வருடப்பிறப்பு ஒவ்வொரு வருடமும் ஆங்கில மாதம் ஏப்ரல்-13 அல்லது 14-ம் தேதியன்று வருகின்றது. ஆண்டுக்கு இருமுறை சூரியன் நேர்கிழக்கே உதித்து, உச்சி வேளையில் அதே நேர்கோட்டைக் கடந்து, மாலையில் அதே நேர்கோட்டில் மறைகிறான். அதாவது. ஆதவன் பூமத்திய ரேகையில் பயணிக்கிறான். அவ்வாறு சூரியன் பயணிக்கும் ஒரு நாள் சித்திரையிலும், மற்றொரு நாள் ஐப்பசியிலும் வருகிறது. இவ்விரண்டு நாட்களையுமே விஷு புண்ணிய காலம் என்று போற்றுகின்றனர். சித்திரையில் வரும் விஷு நாளையே புத்தாண்டுத் தொடக்கமாக கொண்டாடுகின்றோம்.

தமிழ் புத்தாண்டு சிறப்பு

சித்திரை மாதத்தில் வசந்தகாலம் எனும் இளவேனில் காலம் தொடங்குகிறது. மாந்தளிர் செழித்து, வேப்பம்பூ பூத்துக்குலுங்கும் காலம் .மனித வாழ்க்கையில் இனிப்பும், கசப்பும் கலந்தே இடம் பெறுகின்றன. அதாவது வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இந்த உண்மையை உணர்த்துவது போல அன்றையதினம் சமையலில் ஆறு சுவை உணவை சாப்பிடுகின்றனர். அதில் வேப்பம்பூ, பச்சடியே இருக்கும். அன்றைய தினம் புத்தாடை உடுத்திக்கொண்டு ஆலயங்களுக்கு சென்று இறைவழிபாட்டை முடித்துக்கொண்டு உற்றார் உறவினர்கள். நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்வதை மரபாக கொண்டிருக்கின்றனர்.

தமிழ் பஞ்சாங்கம்

தமிழ் பஞ்சாங்கம் வானவியல் முறையில் கணக்கிடப்படுகிறது. புத்தாண்டு நாளில் இல்லத்தோறும் புதுப் பஞ்சாங்கத்திற்குப் பூஜைகள் செய்கின்றனர். திருக்கோயில்களில் பஞ்சாங்க வல்லுனர்கள் பஞ்சாங்கத்தைப் படித்து புத்தாண்டுப் பலன்களை விளக்குகின்றனர். அப்பொழுது குறிப்பாக மழையின் பருவம், கந்தாய பலன்களில் லாப – நஷ்டநிலை ஆகிய விபரம் பற்றி விளக்குகின்றனர்.

பிற மாநிலத்தில் புத்தாண்டு

தெலுங்கு மொழி மக்களும், கன்னட மொழி மக்களும் இதே அறுபது ஆண்டுகளை கணக்கில் கொண்டாலும் பங்குனி கடைசியில் வரும் அமாவாசை தினத்தையே புத்தாண்டு துவக்கமாக கொள்கின்றனர். அதை யுகாதி பண்டிகையாக கொண்டாடுகின்றனர். வடதேசத்தில் பைசாகி என்றும் கேரளத்தில் விஷு என்றும் இதை கொண்டாடுகின்றனர்.

The post தமிழ் புத்தாண்டு சிறப்பு | Tamil Puthandu appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

வளம் தரும் சித்ரா பௌர்ணமி | சித்ரா பௌர்ணமி சிறப்பு
சித்ரா பவுர்ணமி :

இந்தநாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தி அடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.

சித்ரா பவுர்ணமி பூஜை :

சித்ரா பவுர்ணமி அன்று செய்யப்படும் விரிவான பூஜையை பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும். நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தில் தேவதையை ஆவாஹனம் செய்து. சித்திர குப்தம்

"மஹா ப்ராக்கும் லெகானி தாரிணம்
சித்ர ரத்னாம்பாதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்”

என்ற சித்ரகுப்தனின் சுலோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வாசனை பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம். பூஜையில் பேப்பர். பென்சில், நவதானியங்கள், அரிசி, பருப்பு முதலியவைகளை வைத்து,பூஜை முடிந்தவுடன் பிராமணர்களுக்கு தானம் செய்ய வேண்டும். சித்ரகுப்தனிடம் மலையளவு பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்ளும்படி பிரார்த்திப்பது வழக்கத்தில் இருந்து வருகிறது.

சித்ரா பவுர்ணமி பூஜையின் பலன் :

சித்ரகுப்தம் என்பது மறைந்துள்ள படம் எனப்படும். இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நமக்கு மேலான சக்தி ஒன்று (நமக்கு தெரியாமலேயே நமது தோளில் சித்ரகுப்தர்களாக அமர்ந்து) இடைவிடாமல் கண்காணிக்கிறது. இந்த எண்ணத்தை நமக்குநாமே நினைவுப்படுத்திக் கொள்வதே சித்ரா பவுர்ணமி பூஜையின் மானசீக பலன் ஆகும்.

The post வளம் தரும் சித்ரா பௌர்ணமி | சித்ரா பௌர்ணமி சிறப்பு appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

Vaikasi Visakam – வைகாசி விசாகம் சிறப்புகள்
வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். சித்ரா பௌர்ணமிக்கு அடுத்து வரும் பௌர்னமியானது விசாக நட்சத்திரத்தில் வருவதால்தான் மாதத்திற்கே வைகாசி என்று பெயர் வந்தது. விசாகம் ஞான நட்சத்திரம் என்ற பெயரும் உண்டு, 27 நட்சத்திரத்தில் விசாகமும் ஒன்று.

விசாக நட்சத்திர சிறப்பு

முருகன் அவதரித்தது விசாக நட்சத்திரத்தில்தான். எனவே முருகனுக்கு விசாக பெருமான் என்ற பெயரும் உண்டு.சூரபத்மன் போன்ற அசுரர்களின் கொடுமையை தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். உடனே சிவன் அவர்களை காக்க தனது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்தார். அந்த தீப்பொறிகள் வாயுஅக்னி முதலிய தேவர்கள் மூலம் கங்கையில் கொண்டுவிடப்பட்டன. கங்கையோ அதை சரவணப்பொய்கையிலே சேர்த்தது. இங்கு வந்து சேர்ந்ததும் ஆறு தீப்பொறிகளும் வைகாசி விசாகத்தன்று 6 குழந்தைகளாக மாறின.

விஷ்ணு பகவான் கார்த்திகை பெண்கள் மூலமாக அக்குழந்தைகளுக்கு பாலூட்டுவித்தார். இவ்வாறு ஆறுமுகம் கொண்ட முருகன் தோன்றி தேவர்களை காத்தார். நம்மாழ்வாரும் விசாகத்தில்தான் பிறந்திருக்கிறார். வைகாசி விசாகத்தன்றுதான் வடலூரில் ராமலிங்க வள்ளனர் சத்திய தர்மசாலையை துவங்கினார். பத்தர் தோன்றியது, ஞானம் பெற்றது, நிர்வானம் அடைந்தது எல்லாமே வைகாசி பவுர்ணாமியில்தான். இதைத்தான் பூர்ணிமா என கொண்டாடுகின்றனர். இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும். பிரம்மோற்சவமும் நடைபெறும். இத்தினம்

பல சமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும், வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருச்செந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும்.

The post Vaikasi Visakam – வைகாசி விசாகம் சிறப்புகள் appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

ஆடிப்பெருக்கு சிறப்பு
ஆடிப்பெருக்கு

ஆடி மாதம் பிறந்ததும் தக்ஷினாயனம் ஆரம்பமாகிறது. முன்னோர்கள் ஒரு ஆண்டினை இரண்டு அயனங்களாகப் பிரித்து இருக்கிறார்கள். ஆடி முதல் மார்கழி வரை தக்ஷினாயனம். தை முதல் ஆனிவரை உத்ராயணம், ஒன்று மாரி காலத்தின் ஆரம்பத்தையும் அடுத்தது கோடை காலத்தின் துவக்கத்தையும் காட்டுகின்றன. இந்த புண்ணிய கால கட்டங்களில் தீர்த்த ஸ்தானம் மிகவும் விசேஷம்!

ஆடிப்பெருக்கு சிறப்பு

ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது தமிழர் மரபு. ஆற்றங்கரையில் சித்திரான்னங்கள் எடுத்துச் சென்று குடும்பத்தோடும் நண்பர்களோடும் உண்டு மகிழ்வார்கள். காவேரி அம்மனுக்கு காதோலைகருகமணி வாங்கி ஆற்றில் போடுவது வழக்கம்.

இத்திருநாளில் குழந்தைகள் சப்பரம் கட்டி ஆற்றின் கரையில் குதூகலமாக களித்து மகிழ்வார்கள். ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் துவக்கம் ஏற்படுகிறது! ஆடி பாதம் பண்டிகைகளின் ஆரம்பம் ! பூமாதேவி அவதரித்த ஆனந்த மாதம், அம்மனுக்கு ப்ரீதியான ஆடி மாதம் பண்டிகைகளின் ஆரம்ப மாதம்!

The post ஆடிப்பெருக்கு சிறப்பு appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி சிறப்பு , வரலாறு
நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி சிறப்பு

ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தியில் நாக சதுர்த்தியும், ஐந்தாம் நாளாகிய பஞ்சமியில் கருட பஞ்சமியும் வரும், இதற்கு ஒரு கதை கூறுவார்கள்.

நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி வரலாறு

ஒரு பெண்ணின் ஐந்து சகோதரர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் சமயம் நாகப்பாம்பு கடித்து இறந்து விடுகின்றனர்; அவர்களை உயிர்ப்பித்துத் தரும்படி அந்தப் பெண் நாகராஜனை வேண்டிப் பூஜை செய்தாள், அந்த நாள் நாக சதுர்த்தி, இறந்தவர்களுக்கு உயிர்ப்பிச்சை வேண்டி கருடனை நோக்கி செய்த பூஜை கருட பஞ்சமி,உடன் பிறந்த சகோதரிகள், தங்கள் சகோதரர்களின் க்ஷேமத்தைக் கோரி இதைக் கொண்டாடுவதாக ஐதீகம்.

நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி பூஜை

இப்பண்டிகை தென்னிந்தியாவில் சில பிரிவினர் மட்டுமே கொண்டாடுகின்றனர். வடஇந்தியாவில் சதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜை செய்து, பாம்பு புற்றுக்குப் பால் வார்ப்பார்கள். அன்று சகோதரிகள், வீட்டில் ஏதாவது ஒரு உலோகத்தில் செய்த நாகத்தை வைத்து பூஜை செய்து நோன்புச் சரடை வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும். (ஒரு மஞ்சள் சர்ட்டில் நடுவில் புஷ்பம் சுட்டி பூஜையில் வைத்து அதைக் கட்டிக் கொள்ள வேண்டும்) புற்றுக்குச் சென்று பால் விட வசதியில்லாதவர்கள் பூஜை செய்யும் நாகத்திற்கே பால் அபிஷேகம் செய்ய வேண்டும். வீட்டில் பூஜை செய்தபின் அருகில் உள்ள பாம்புப் புற்றுக்குச் சென்று பால்விட்டு வெற்றிலை, பாக்கு பழம் நிவேதனம் செய்து கற்பூரம் ஏற்றிவிட்டு வரும்பொழுது சிறிது புற்று மண் எடுத்து வரவேண்டும். வீட்டிற்கு வந்ததும் வாயிற்படியின் இரண்டு பக்கத்திலும், மஞ்சள் பூசி குங்குமத்தால் மேலே தலை, கீழே வால் இருக்கும்படி வரைந்து கற்பூரம் ஏற்றி நமஸ்கரித்துவிட்டு உள்ளே செல்ல வேண்டும். எடுத்து வந்துள்ள புற்று மண்ணுடன் சிறிது அட்சதை சேர்த்து, சகோதார்கள் வெளியூரில் இருந்தால் கவரில் வைத்துத் தபாலில் அனுப்பவேண்டும். அருகில் இருந்தால் புற்றுமண், அட்சதையை அவர்கள் தலையில் போட்டு சகோதரர்கள் பெரியவர்களாய் இருந்தால் நமஸ்காரம் செய்ய வேண்டும். சிறிய சகோதரனாய் இருந்தால் ஆசிர்வாதம் செய்ய வேண்டும். அதற்கு பதியாக சகோதரர்கள் தங்கள் சக்திக்கு தக்கபடி ஏதாவது தட்சிணையைத் தாம்பூலத்துடன் கொடுப்பார்கள்.

ரக்ஷா பந்தன்

இதே மாதிரி வட இந்தியாவிலும் “ராக்கி” அல்லது “ரக்ஷா பந்தன்” என்று கொண்டாடுகிறார்கள். சகோதரனுக்கு வலது கையில் ரக்ஷை மாதிரி சரிகையில் செய்து கட்டி தங்கள் அன்பை தெரிவித்து கொள்கிறார்கள். சகோதரன் இல்லாதவர்கள் கூட தம் சினேகிதர்களுக்கும், உறவினர்களுக்கும் ராக்கி பந்தன் என்று கட்டுவார்கள்.

The post நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி சிறப்பு , வரலாறு appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

ஆவணி அவிட்டம் என்றால் என்ன? ஆவணி அவிட்டம் சிறப்பு
ஆவணி அவிட்டம்

ஆவணி மாதம் பௌர்ணமி தினம் அவிட்ட நட்சத்திரத்தில் வரும் பண்டிகை. இப்பண்டிகையின் நோக்கம் புதியதாக பூணூல் மாற்றிக் கொள்வதே காலையில் பிரம்மச்சாரி சமிதாதானம் செய்ய வேண்டும். கிரஅஸ்தர்கள் காமேகார்ஷித் ஜபம் செய்து சங்கல்பம் செய்து ஆவணி அவிட்டம் செய்ய வேண்டும் காயத்திரி ஜபம் செய்ய வேண்டும். எவர் ஒருவர் காயத்திரி மந்திரம் ஜபிக்கிறார்களோ அவர்களிடம் எந்த தீய சக்தியும் நெருங்காது. சூரியனை கருத்தில் கொண்டு ஞான பரம்பொருளை தியானிப்பதுதான் இம்மந்திரத்தின் தாத்பரியமாக கருதப்படுகிறது.

The post ஆவணி அவிட்டம் என்றால் என்ன? ஆவணி அவிட்டம் சிறப்பு appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

ஆவணி அவிட்டம் பூணூல் மாற்றிக்கொள்ள உகந்த நாள்
ஆவணி அவிட்டம் பூணூல் சிறப்பு

ஆடை அணிவது உடம்புக்கு அவசியமானது போல உயிர் நலத்துக்கு அவசியமாகப் பூண (அணிய) வேண்டிய நூல் ஆதலின் “பூணூல்” என்று பெயர் பெற்றது. மந்திர பூர்வமாக அணிவதால் தெய்வீகத் தன்மை பெறுகிறது. தெய்வ காரியங்களைச் செய்யும்போது இடது தோளில் பூஜால் இருந்தால் தோரிகளும், பித்ரு வழிபாட்டின் போது வலது தோளில் பூணூல் அணிந்து கொண்டால் பித்ருகளும் வந்து வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள். வேதத்தை ஓதி, கடவுளை வேண்டி நாடு செழிக்க நலம் பெற ஜீவ வர்க்கங்கள் மரம், செடி கொடி, பிராணி வாக்கங்கள், மனித சமுதாயம் எல்லோரும் நல்வாழ்வு பெற வேண்டுகோள் விடுக்க பூணூல் அணிந்து வேள்விகளையும், பூஜைகளையும் செய்து வருகிறார்கள். பூணூல் ஒன்பது விதமான தேவதைகளுடன் முப்புரி நூல்களாக விளங்கித் தெய்வ வழிபாடு செய்ய உதவியாகிறது. இது கடவுளுக்கு அடிமை என்ற அடையாளத்தையே காட்டுகிறது.

The post ஆவணி அவிட்டம் பூணூல் மாற்றிக்கொள்ள உகந்த நாள்  appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

ஆவணி மூலம் | avani moolam in tamil
ஆவணி மூலம்

செந்தமிழ் வழங்கும் பாண்டிய நாட்டிலே அரசாண்ட ஹரிமர்தன பாண்டியனின் முதல் மந்திரியான திருவாதவூரான் பிறவி துன்பத்தை போக்க வேண்டும் என்று உலக பற்றை வெறுத்து சிவபற்றை விரும்பி சிவபெருமானை வழிபடலானார்.

மாணிக்கவாசகருக்கு திருவருள்

ஒரு சுபதினத்தில் மன்னன் 49 கோடி பொன் கொடுத்து சோழ நாட்டிலே குதிரைகள் வாங்கி வருமாறு அனுப்பினான். திருஉள்ளம். கொண்ட பரமசிவன் பரமாச்சாரியார் திருமேனிக் கொண்டு திருவாதவூருக்கு நான்மறை அறங்களோங்க மேன்மை கொள் சைவ நீதி, விபூதி பஞ்சாக்கரம் மேலும் மேலும் விளங்க வேதமாகிய வெண் பரியின் மேல் குதிரை வர்த்தகராகத் திருக்கோலம் கொண்டு சோமகந்தாப் பெருமானார் மதுரைக் ஏழுந்தருளிய தினம் ஆவணி மூலம் ஆலவாயரசன் மாணிக்க வாசகர் பொருட்டாக நரியைக் (குதிரை) பரியாக்கித் திருவருள் பாலித்த புனித நாள் எம்பெருமான் குதிரைச் சேவகராகி எழுந்தருளி மாணிக்கவாசகருக்கும், பாண்டியனுக்கும் மதுரையில் திருவிளையாடல் புரிந்த தினம் ஆவணிமூலம். இறைவனே எழுந்தருளி அருள்புரிந்து திருவிளையாடல் நிகழ்த்திய இந்தினத்தில், இறைவனை வணங்கி அவனருள் பெறுவோமாக.

The post ஆவணி மூலம் | avani moolam in tamil appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

வரம் தரும் நவராத்திரி சிறப்பு
நவராத்திரி சிறப்புகள்

புரட்டாசி வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரி, சக்தியை வழிபட தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி, சக்தியை சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும். புரட்டாசி மாதத்தில் வழிபடுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரத நவராத்திரி எனப்படும். பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவை தசரா என்று அழைப்பர்.

நவராத்திரி 9 நாள் வழிபாடு  விளக்கம்

முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட வேண்டும். முதல் மூன்று நாட்கள் “துர்கை வழிபாடு” அடுத்த மூன்று நாட்கள் “லட்சுமி வழிபாடு இறுதி மூன்று நாட்கள் “சரஸ்வதி வழிபாடு” என்று வழிபடுவது நன்று. துர்கை, மகிஷன் என்ற எருமை தலை வடிவம் கொண்ட அரகன் உடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இதையே நவராத்திரி என்றும் அவனை வதம் செய்த பத்தாம் நாள் விஜயதசமி என்றும் கூறுகிறது. மகிஷனை வதைத்ததால் மகிஷா ‘சுரமர்த்தினி” என்ற பெயர் பெற்றுள்ளாள்.

The post வரம் தரும் நவராத்திரி சிறப்பு appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

சரஸ்வதி பூஜை | saraswati puja in tamil
சரஸ்வதி பூஜை சிறப்பு

நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில், மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும் போது, சாஸ்வதியை ஆவாஹனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை திருவோனாம் என்ற நட்சத்திரம் உச்சமாகும்.
ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை பூஜிப்பது சரஸ்வதி பூஜை சிலர், நூல்களில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்து வழிபடுகிறார்கள். சாஸ்வதி பூஜையன்று நூல்களை யாரும் படிப்பதில்லை.

The post சரஸ்வதி பூஜை | saraswati puja in tamil appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

ஆயுதபூஜை சிறப்பு | Ayudha pooja in tamil
ஆயுதபூஜை

தொழில் செய்பவர்கள் கொண்டாடுவது ஆயுதபூஜை, அவர்கள் தாங்கள் பயன்படுத்தும் ஆயுதங்களுக்குப் பூவும், பொட்டுமிட்டு வழிபடுகிறார்கள்.

“செய்வன திருந்தச் செய்ய வேண்டும்” காரணம், “செய்யும் தொழிலே தெய்வம்“. இந்த அடிப்படைகளை உணர்த்தும் நாளே சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை, நவராத்தியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாள்கள் ஆகும்.

The post ஆயுதபூஜை சிறப்பு | Ayudha pooja in tamil appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

வெற்றி தரும் விஜயதசமி வழிபாடு
விஜயதசமி

விஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்

ஒன்பது நாள்கள் மகிஷாசூரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி வெற்றி தருகிற பத்தாம் நாள், பல குழந்தைகளின் வித்யாரம்பம் இந்த நாளில்தான் ஆரம்பம் செய்கின்றனர். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம்.

நவராத்திரி பத்து நாள்களும் வழிபாடு செய்ய முடியாதவர்கள் சப்தமி, மகா அஷ்டமி, மகா நவமி ஆகிய மூன்று நாள்களில் மட்டுமாவது (7, 8, 9-வது நாட்கள்) தேவி வழிபாடு செய்யலாம். அதுவும் முடியாதவர்கள் மகா அஷ்டமி (8-ஆம்) நாளன்று நிச்சயம் தேவி வழிபாடு செய்ய வேண்டும்.

வடஇந்தியாவில் உத்திரபிரதேசத்தில் “ராம்லீலா” என்றும், வங்காளிகள் காளி, துர்கா பூஜை என்றும் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் பொம்மை கொலு வைத்து பத்து தினமும் கொண்டாடுகின்றனர்.

வெற்றி தரும் விஜயதசமி பூஜை

நவராத்திரியின் போது சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்தால் பூர்வ ஜென்ம பலன் கிடைக்கும் என்பது ஐதிகம், ஒருசிலர் முதல் நாள் ஒர் கன்னிப்பெண், இரண்டாவது நாள் இரண்டு கன்னிப்பெண் என்று ஒன்பது தினங்களிலும் கன்னிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து உணவிட்டு புது துணி வாங்கி கொடுக்கின்றனர். பிரதி தினம் லலிதா சஹஸ்ர நாமமும் நவராத்திரி அன்று சரஸ்வதி அஷ்டோத்திரமும் பாராயனாம் செய்ய வேண்டும். விஜயதசமி அன்று பூஜையில் வைத்துள்ள புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டும். கல்வி செல்வம் பெருகுவதாக ஐதீகம்.

The post வெற்றி தரும் விஜயதசமி வழிபாடு appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

கோகுலாஷ்டமி – ஜன்மாஷ்டமி | gokulashtami in tamil
கோகுலாஷ்டமி – ஜன்மாஷ்டமி

கோகுலாஷ்டமி என்றால் என்ன ?

கண்ணன் பிறந்த நாளைப் பாரதம் முழுவதும் இந்துக்கள் பண்டிகையாகவே கொண்டாடுகிறார்கள். ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்குப் பிறகு எட்டாவது நாள் அஷ்டமி தினத்தன்று நள்ளிரவில் கண்ணான் பிறந்ததாகக் கொண்டாடப் படுகிறது.
இத்திருநாளை வடக்கே ஜன்மாஷ்டமி என்று கொண்டாடுகிறார்கள். வைனவர்கள் கண்ணன் அவதரித்த ரோகிணி நட்சத்திரத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

கிருஷ்ணன் பிறந்த மதுராவில் இந்த நள்ளிரவு நேரத்தில் சிறப்புப் பூஜையுடன் கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. அந்த நாளை அந்த நேரம் வரை உபவாசம் இருந்து பூஜை செய்வது வழக்கம். வைணவர்கள் குழந்தை பிறந்தபின், பிறந்த நாளாகக் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள்.

தமிழ்நாட்டில்  கோகுலாஷ்டமி கொண்டாட்டம்

தமிழ்நாட்டில் கோகுலாஷ்டமி என்றும் ஸ்ரீ ஜெயந்தி என்றும் கொண்டாடப்படும் தமிழ்நாட்டில் கண்ணனின் பிறந்த நாள் குழந்தைகளால் குதூகலமாக கொண்டாடப்படுகிறது. அன்று கண்ணனுக்குப் பிடித்தமான முறுக்கு சீடை, தேன்குழல், கட்டு, அப்பம், வெண்ணை ஆகியவற்றை நைவேத்தியமாக வைத்துப் பூஜித்துக் குழந்தைகள் ரசித்துச் சாப்பிடுவார்கள். கண்ணன் வீட்டுக்கு வருவதாகக் கருதி வீட்டின் வாசலிலிருந்து பூஜை அறை வரையில் குழந்தைக் கண்ணானின் பாதங்களை மாக் கோலத்தில் வரைந்து மகிழ்வார்கள். தமிழக கிராமங்களில் இன்றும் கண்ணன் பிறந்தநாள் இரவு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெரியவர்கள் கதாகாலட்சேபம், கச்சேரி பஜனை போன்றவற்றில் ஈடுபடுவார்கள். கிருஷ்ணன் படத்தை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பழக்கமும் உண்டு. தமிழ்நாட்டில் உறியடி உற்சவம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். எண்ணெய், பிசுக்கு ஆகியவற்றைப் பூசி உருவாக்கிய கம்பத்தில் உச்சியில் அடங்கிய பரிசு மூட்டை தொங்கும். வாலிபர்கள் போட்டி போட்டுக் கொண்டு காசுகள் அடங் வழுக்குமாத்தில் ஏறிப் பரிசுப் பணத்தை பறிப்பார்கள். அவர்கள் ஏற முடியாதபடி சுற்றிலும் உள்ள மக்கள் தண்ணீரை அவர்கள் மீது பீச்சி அடித்து விளையாடுவார்கள். வேறு சில முறைகளிலும் உரியடி உற்சவம் நடைபெறுவது வழக்கத்தில் இருந்து வருகிறது.

The post கோகுலாஷ்டமி – ஜன்மாஷ்டமி | gokulashtami in tamil appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

தீபாவளி பண்டிகையின் வரலாறு மற்றும் சிறப்பு
தீபாவளி பண்டிகை

ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் சதுர்த்தியில் வரும் பண்டிகை தீபாவளி பண்டிகை. தீம் ஆவளி (தீபாவளி) தீப வரிசை வாழ்க்கையில் இருளை நீக்கி ஒளியை கொடுப்பது.

தீபாவளி பண்டிகையின் வரலாறு

பகவான் ஸ்ரீகிருஷ்ணான் நரகாசூரனை வதம் செய்தார். அவன் இறக்கும் தருவாயில் பகவானிடம் சில வரங்களை கேட்டான். அதாவது அவன் இறந்த தினத்தை உலகில் உள்ள மக்கள் எவ்வித துக்கம் இன்றி அன்று மங்கள ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்பதே அன்று எண்ணை ஸ்நானம் செய்வது மிக அவசியம், எண்ணையில் லட்சுமியும் நீரில் கங்கையும் அன்று வருவதால் கங்கா ஸ்தான பலன் கிடைக்கும்.

அன்றையதினம் காலை ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும் போது கங்கா ஸ்நானம் ஆச்சு என்று கேட்பது வழக்கம். வடநாட்டில் அன்று லட்சுமி பூஜை செய்து புதுக்கணக்கு ஆரம்பிப்பார்கள். ஜைன மதத்தினர் அன்று லட்சுமி பூஜை செய்து புது கணக்கு ஆரம்பிப்பர். ஒரு சிலர் அன்றையதினம் சூபோ, லட்சுமி பூஜையும் செய்வதுண்டு. கேரளாவில் ஓணம் பண்டிகை சர்வ மதத்தினர் கொண்டாடுவது போல் தமிழகத்தில் மதவேறுபாடின்றி அனைத்து சமுதாயத்தினரும் பட்டாக வெடித்து கொண்டாடும் பண்டிகை தீபாவளி, புதியதாக திருமணம் ஆன தம்பதிகள் மணமகள் வீட்டில் தலை தீபாவளி கொண்டாடி மகிழ்கின்றனர். பகவான் கிருஷ்ணன் அரகனை பலவித அஸ்திர, சக்கரங்களை கொண்டு தாக்கி அழித்த போது ஏற்பட்ட பயங்கர சப்தங்களை நினைவு கொள்ளும் வகையில் அன்றையதினம் பட்டாசு வெடிக்கப்படுகின்றது.

தலை தீபாவளி

புதுமாப்பிள்ளைகள் வந்து கொண்டாடும் தலை தீபாவளியன்று மணமக்கள் இருவரையும் அணிந்த உட்கார வைத்து எண்ணை நலங்கிடுவது வழக்கம். கங்கா ஸ்நானம் செய்து புத்தாடை பிறகு மணமக்கள் இருவரையும் அமரச் செய்து ஆரத்தி எடுப்பது வழக்கம்.
தீபாவளி மருந்து அன்றைய தினம் பட்சணங்கள் சாப்பிடும் முன் தீபாவளி மருந்து சாப்பிட வேண்டும். தீபாவளி மருந்து என்பது சுக்கு, மிளகு, சீரகம், திப்பிலி, ஓமம், லவங்கம், சித்தரத்தை, எலக்காய் பரங்கிசக்கை இவைகளை சூரணம் செய்து பனைவெல்லம், நெய், தேன் சேர்த்து தயாரிப்பது.

தீபாவளி சிறப்பு

நரகாசூரன் என்ற கொடிய அசுரனை அழித்த இத்தினத்தில் நம் அகா எண்ணங்களை ஒழித்து நல்ல எண்ணங்களுடன் தீபத்திருநாளில் தீபம் ஏற்றி கொண்டாடி மகிழ்ந்திடுவோம். கேதார கௌரி விரதம் ஐப்பசி அமாவாசை அன்று அனுஷ்டிப்பது போல் ஒரு சிலர் தீபாவளியன்றும் விரதம் இருந்து நோன்பு செய்வதுண்டு.

The post தீபாவளி பண்டிகையின் வரலாறு மற்றும் சிறப்பு appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

Thula Snanam | ஐப்பசி துலா ஸ்நானம் சிறப்பு
ஐப்பசி துலா ஸ்நானம்

ஐப்பசி முதல் தேதியிலிருந்து 30ஆம் தேதிவரை துலாஸ்நானம் என்று காவேரிக் கரையில் உள்ளவர்கள் செய்வார்கள். கங்கையே, காவேரியில் வந்து தன் பாவத்தை போக்கிக் கொள்ள ஸ்நானம் செய்கிறாள் என்பது ஐதிகம்.

துலா ஸ்நானம் சிறப்பு

வீட்டிலேயே மாதம் முழுவதும் தினமும் விடியற்காலை எழுந்து ஸ்நானம் செய்து, காவேரி பூஜை செய்து சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் கொடுக்க வேண்டும். மாதம் முழுவதும் செய்ய இயலாவிட்டாலும் கடைமுக ஸ்நானம் ஐப்பசி கடைசி தினத்தன்று அவரவர்கள் அருகாமையில் உள்ள ஆற்றிற்கு சென்று ஸ்நானம் செய்து பூர்வஜென்ம பாவத்தை போக்கிக் கொள்ளலாம். மனிதர்கள் இறைவனின் அருட்கடலில் மூழ்கிய புனிதமடைந்து வீடுபேறு அடைவதே இதன் நோக்கமாகும்.

The post Thula Snanam | ஐப்பசி துலா ஸ்நானம் சிறப்பு appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

கந்த சஷ்டி திருவிழா | kandha sasti surasamharam
கந்த சஷ்டி – kandha sasti

பரமேசுவரனுக்கும் பார்வதிக்கும் புத்திரராக அருள்பாலித்த முருகப் பெருமான் தேவர்களுக்குத் தொல்லை தந்த சூரபத்மன் , தாரகன் சிங்கமுகன் போன்ற கொடிய அரக்கர்களை சம்ஹாரம் செய்தார். கந்தப் பெருமான் தமது வேலாயுதத்தால் சூரபத்மனை இரு கூறாக்கினார். அவரது பேரருளால் ஒன்று சேவலானது, மற்றொன்று மயிலானது. மால்மருகன் மயிலை வாகனமாகக் கொண்டார். சேவலைக் கொடியிலே கொண்டார். கந்தப்பெருமான் சூரபத்மாதியரை ஒடுக்கப்போர் புரிந்த திருவிளையாடலைத்தான் கந்தர் சஷ்டி விழாவாக அனுஷ்டிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

கந்த சஷ்டி வரலாறு

இந்தப்போர் பத்து நாட்கள் நடைபெற்றது. முதல் நான்கு நாட்கள் சூரபத்மனைக் சேர்ந்த வீரர்கள் பலரைத் தோற்கடித்த நாள். அடுத்த ஆறு நாட்கள்தான் பாநுகோபன், சிங்கமுகன் சூரபத்மன் போன்றவரை கந்தவேள் வென்று வாகை சூடிய திருநாள்.
இந்தப் போர் ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் நடந்தது. போரின் இறுதி நாள் சஷ்டி திதியன்று குரபத்மனை சம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான் எனவே ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் ஆறு நாட்களும் சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சஷ்டி திதியில் வரும் விரதமானதால் சஷ்டி விரதம் என்ற பெயரும் ஏற்பட்டது.

The post கந்த சஷ்டி திருவிழா | kandha sasti surasamharam appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

கார்த்திகை தீபம் வரலாறு , தத்துவம் மற்றும் சிறப்பு
கார்த்திகை தீபம் – karthigai deepam

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை திருக்கார்த்திகை விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிவஸ்தலமான திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. எனவே, கார்த்திகை நட்சத்திரம் சிவன், முருகன் ஆகியோரை ஒருசேர வழிபட ஏற்ற நாளாக உள்ளது,

கார்த்திகை தீபம் தத்துவம்

திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப் படுவதின் நோக்கம் “நான்” அகந்தையுடன்தான் மனிதர்கள் வாழ்கின்றனர். நமக்கும் மேலாக ஒருவன் இருக்கிறான். ஆணவத்துடன் இருந்தால், நமக்கு அவன் புத்தி புகட்டுவான் என்ற அரிய தத்துவத்தை விளக்க இந்த விழா எடுக்கப்படுகிறது.

கார்த்திகை தீபம் வரலாறு

ஒருமுறை பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இருவரும் தங்களுக்குள் ஒரு போட்டியை நடத்தினர். உலகாளும் ஈசனான சிவபெருமானின் முடியை பிரம்மா பார்த்து வருவது எனவும், அவரது பாதத்தை விஷ்ணு பார்த்து வருவது எனவும் முடிவு செய்தனர். அன்னப்பறவை உருவமெடுத்து சிவனின் முடியைக் காண உயரே பறந்தார் பிரம்மா. விஷ்ணுவோ, பன்றி உருவமெடுத்து, பூமியைத் தோண்டி சிவனின் பாதத்தை தேடி பாய்ந்தார். பிரம்மா உயரே பறக்க பறக்க சிவன் உயர்ந்து கொண்டே போனார். விஷ்ணு கீழே போசுப்போக சிவனின் கால்கள் நீண்டு கொண்டே போனது. இருவருமே தோல்வியடைந்து சிவபெருமானிடம் செய்வதறியாது நின்றனர். அப்போது சிவன் இருவரிடமும், இந்த உலகில் யாருமே பெரியவர் இல்லை, நமது மனதில் இருக்கும் அகங்காரமே இது போன்ற போட்டிகளுக்கு காரணமாகிறது என்றார். இதைக்கேட்ட பிரம்மா, விஷ்ணுவின் மனதில் ஒளி பிறந்தது. அப்போது சிவனும் ஜோதி வடிவமாய் காட்சி தந்தார். தங்களுக்கு கிடைத்த இந்த ஜோதி வடிவக்காட்சி அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென இருவரும் வேண்டினர். கார்த்திகை மாதம், திருக்கார்த்திகை தினத்தில் திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாக காட்சி தருவதாக அருள்பாலிக்கின்றார் சிவபெருமாள்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத்தின் முதல் நாள் பரணி தீபம் ஏற்றப்படும். இது முருகனுக்குரிய வழிபாடு. மறுநாள் திருக்கார்த்திகை தீபம் சிவனுக்காக ஏற்றப்படுகிறது.
அன்றைய தினத்தில்தான் உமையாம்பிகைக்கு சிவபெருமாள் தனது உடம்பில் ஒரு பாகத்தை அளித்து அர்த்தநாதீஸ்வரர் உருவெடுத்ததாக வரலாறு. அன்றைய தினம் திருவண்ணாமலையில் அர்த்தநாதீஸ்வரர்: புறப்பாடும் நடைபெறும்,

கார்த்திகை தீப சொக்கபனை

அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பூஜை தடைபெற்று, சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். சுட்டகப்பனை எனும் சொல்லே சொக்கபனையாக மருவியுள்ளது. சுட்டகம் என்பது வறட்சி, உலர்ந்த தென்னை பனை, கமுகு, வாழை இவற்றின் தண்டினை தீபதண்டமாக ஆலயங்களில் பனை மற்றும் தென்னை ஓலைகளால் சுட்டகப்பனை எனும் சொக்கப்பனையில் அக்னி மூட்டி, எரியும் ஜுவாலையில் ஜோதி சொரூபமாக இறைவனை வழிபடுவதாக வரலாறு இருந்து வருகிறது.

The post கார்த்திகை தீபம் வரலாறு , தத்துவம் மற்றும் சிறப்பு appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

பிருந்தாவன துவாதசி சிறப்பு
பிருந்தாவன துவாதசி

கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு அடுத்த நாள் அன்று துளஸி கல்யாணம் செய்ய வேண்டும். அன்று துளஸி தேவி மஹா விஷ்ணுவை மணந்து கொண்ட நாளாகும். கார்த்திகை மாதம் வரும் சோமவார காலங்களிலும், நெல்லிப்பூஜை எனும் நெல்லி மரத்திற்கும், துளசி செடிக்கும் திருமணம் செய்வித்து வனபோஜனம் செய்வதை பெரியோர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.

பிருந்தாவன துவாதசி பூஜை

துளசியை பிருந்தை என்றும் கூறுவர். பகவான் நெல்லி மரமாகத் தோன்றியதால் அன்று நெல்லிக் கிளையை துளசி செடியுடன் வைத்து பூஜை செய்யவேண்டும். கிளை கிடைக்காவிடில் நெல்லிகாயின் மேல் நெய்யில் திரியை நனைத்து வைத்து தீபம் ஏற்ற வேண்டும். துளசி மாடத்தை அலம்பி கோலம், செம்மண் இட்டு, மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து பூஜிக்கவேண்டும். துளசி தோத்திரம் கூறி பூஜை செய்து கற்பூரம் ஏற்ற வேண்டும். நேரங்களில் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் மஞ்சள் கொடுக்க வேண்டும்.

The post பிருந்தாவன துவாதசி சிறப்பு appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

இராப்பத்து பகல் பத்து உற்சவம் சிறப்பு
இராப்பத்து பகல் பத்து உற்சவம்

வைகுண்ட ஏகாதசியை இடையில் வைத்து அதற்குமுன் பகலில் 10 நாட்களும், அதற்கு பின் இரவில் பத்து நாட்களும் ஆக முறையே 20 நாட்கள் அத்யாயன உற்சவம் நடத்தப்பெறும் இதுவே பகல் பத்து, இராப்பத்து உற்சவம் என்று வைணவத்தில் சொல்லப் பெறும்.

இராப்பத்து பகல் பத்து உற்சவ வரலாறு

மகாவிஷ்ணுவை ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் சிம்மாசனத்தில் இருக்க வைத்துத் தாம் இயற்றிய திருவாய்மொழி என்ற ஆயிரம் பாக்களை மார்கழி மாத ஏகாதசி முதல் 10 நாட்களில் தினம் நூறாகக் கேட்கச் செய்து பத்தாம் நாள் திருவடி சேர்ந்தார்.

இதன்பிறகு ஆண்டுதோறும் இம்மரபைப்பின்பற்றி ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாரை எழுந்தருளச் செய்து அரையர்கள் ஓதி இவ்விழாவை நடத்தி வந்தனர், பின் வந்த திருமங்கையாழ்வார் திருவரங்கத்திற்கு எழுந்தருளச் செய்து இவ்விழாவைத் திருவரங்கத்தில் சம்பிரதாயப்படி நடத்தினார். பின்னர் ஸ்ரீரங்கத்திலேயே நம்மாழ்வார் விக்ரகம் அமைந்து ஏகாதசிக்கு முன் 10 நாட்களில் திருமொழி முதலிய மூவாயிரம் பாடல்களையும் ஓதி முடிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார்.

The post இராப்பத்து பகல் பத்து உற்சவம் சிறப்பு appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

ஹனுமத் ஜயந்தி | hanuman jayanti in tamil
ஹனுமத் ஜயந்தி

ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஜயந்தி, ஜயந்திகளுக்கெல்லாம் ஜயந்தி,  அந்த ஜயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்களம் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். குடும்பத்தில் இன்பம் பெருகும். துன்பம் விலகும், மார்கழி அமாவாசையன்று ஹநுமத் ஜயந்தி கொண்டாடப்படுகின்றது ஸ்ரீமத் ராமாயணம் நடு நாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! ஸ்ரீமத் ராமாயணத்தில் ஸ்ரீ சீதாராமருக்கு பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஸ்ரீ ஆஞ்சநேய மகாப்பிரபு!

ஹனுமத் ஜயந்தி சிறப்பு

ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களிலெல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய் – பக்தருள் பக்தராய் அமர்ந்து உபந்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சகல சந்தோஷங்களை வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால்தான் துளஸிதாஸர் ஸ்ரீ ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதக்ஷணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளியிருப்பார் என்பது அவருக்குத் தெரியும்!

ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடை மாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணை சாத்தி ஆராதிக்க வேண்டும். வாலில் குங்குமப் பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். இப்படி கண்ணனும் மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால்தான், வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். குங்குமப் பொட்டு வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பரியம் என்னவென்றால் அனுமாருக்கு வாலில்தான் சக்தி அதிகம்.

பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்திலிருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வால் முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும். காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே வரவேண்டும்.

The post ஹனுமத் ஜயந்தி | hanuman jayanti in tamil appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

போகி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது ?
போகிப் பண்டிகை சிறப்பு

மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகை. அன்று பழைய பொருட்களை, கழித்து கொளுத்துவது வழக்கம். பழையன கழிதலும், புதியன புகுதலும் போகி பண்டிகையின் சிறப்பாகும்.

போகிப் பண்டிகை வரலாறு

ஆயர்பாடியில் இந்திரவிழாவை யாதவர்கள் நடத்தியதால் இந்திரன், மூவுலகிற்கும் தானே அதிபதி என்று கர்வமுற்று இருந்தான். ஆனால் பகவான் கண்ணனோ யாதவர்களிடம் எங்கும், எதிலும் நிறைந்துள்ள விஷ்ணுவை வழிபட்டால் இந்திரனை ஏன் வழிபட வேண்டும் என்றார். உடனே அனைவரும் விஷ்ணுவை வழிபட ஆரம்பித்தார்கள். இதனால் கோபம் கொண்ட இந்திரன் ஆயர்பாடியில் பெரும் புயல் மழை வர மேகங்களுக்கு ஆணையிட்டான். பெரும் புயல் மழையால் கோகுலம் மூழ்கி மக்கன் அவதிப்பட்டனர். நாராயணன் மக்களை காக்க கோவர்த்தனகிரி மலையை பெயர்த்து குடையாகப் பிடித்து காத்தான். இந்த அதிசயத்தால் அரண்டுபோன இந்திரன் கண்ணன் தான் விஷ்ணு என்பதை அறிந்து கண்ணனிடம் மன்னிப்பு கேட்டான், கண்ணனும் இந்திரனை மன்னித்து, இந்திரா இனிமேல் பொங்கலுக்கு முதல்நாள் போகி என்ற உள் நாமத்துடன் கூடிய விழாவை மக்கள் கொண்டாடுவர். மேலும் “இந்திரோபேந்திர சகித சூரிய நாராயணாம் பூஜயாமி” என போகி தினத்தில் உள்ளன வழிபடுவர் என்று அருள் புரிந்தார்.

The post போகி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது ? appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

தைப்பொங்கல் சிறப்பு |thai pongal festival tamil nadu
பொங்கல் பண்டிகை வரலாறு

தைமாதப் பிறப்பன்று சூரியன் தனுர் ராசியிலிருந்து  மகரத்திலே சூரியன் பிரவேசமாகு நாள் தைப்பிறப்பு எனப்படும். ஆதலின் மகரசங்கராந்தி எனவும் இந்நாள் அழைக்கப்படும். இந்நான் சூரியன் வடக்கு நோக்கிச் சஞ்சரிக்க ஆரம்பமாகும் நாள்.

பொங்கல் என்றால் என்ன?

சங்கராந்தி அல்லது பொங்கல் பண்டிகை – உழவர்கள் வருடம் முழுவதும் பாடுபட்டு, அறுவடை முடித்து, புதுதானியங்களை உபயோகித்து புதுப்பானையில் பொங்கல் செய்வார்கள். பொங்கலன்று சூரியன் தென் திசையிலிருந்து, வடதிசை திரும்புவதாக ஐதிகம், சங்கராந்தி அன்று தகப்பனார் இல்லாதவர் புண்ணியகால தர்ப்பணம் செய்ய வேண்டும். மாதம் பிறந்த பின்தான் பொங்கல் பானை வைக்க வேண்டும். பொங்கல் வைக்கும் பாத்திரத்தைச் சுற்றிலும் சுண்ணாம்பு தடவி சூரியன், சந்திரன் போட்டு குங்குமம் பொட்டு இட வேண்டும். பாத்திரத்திற்கு இலையுடன் கூடிய மஞ்சள் கொத்து கட்ட வேண்டும். சமையல் முதலிய நைவேத்திய சாதனங்களையும் வைத்து சூரிய நாராயண பூஜை செய்து, ஒரு தலைவாழை இலையில் செய்திருக்கும் எல்லாவற்றிலும் சிறிது போட்டு பிசைந்து, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு நான்கு பாகத்திலும் சிறிது போட்டு, பொங்கலோ, பொங்கல் என்று கூற வேண்டும்.

தைப்பொங்கல் சிறப்பு

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர். தைப்பொங்கல் மக்களால் வாழையடி வாழையாகக் கொண்டாடப்படும் ஒரு திருநாளாகும் சூரிய பொங்கலெனவும் இதனைக் கூறுவர். பொங்கல் பெருநாள் நாடு மகிழும் நன்னாள். நாட்டு மக்கள் மறுமலர்ச்சியடையும் பொன்னாள். உள்ளம் பொங்கப் பொங்கல் பொங்கும் தங்கத் திருநாள். அறப்பண்பின் அமைதியிலே – இயற்கையின் எழுச்சியிலே எழுந்த இன்பத் திருநாள் புத்தாண்டைப் பருவ மாறுதலாக வைத்து வரையறுத்தனர் நம் முன்னோர். தென் திசையிலிருந்து வடதிசைக்குச் சூரியன் மாறுவதை வாழ்விலே ஒரு திசை மாற்றமாகப் புதுவாழ்வாகக் கொண்டனர்.

The post தைப்பொங்கல் சிறப்பு |thai pongal festival tamil nadu appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

மாட்டுப் பொங்கல் சிறப்பு | mattu pongal tamil
மாட்டுப் பொங்கல்

பொங்கல் தினத்தின் மறுநாள் கொண்டாடப்படுவது இப்பொங்கல். இது கோபூஜை, பட்டிப் பொங்கல், கன்றுப் பொங்கலெனவும் வழங்கப்படும். பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும், எல்லாக் கிரியைகளும் முடிந்த பின்னர் பசுவை வணங்கி அதனை பூஜித்து உணவை. உண்ண வேண்டுமெனக் சாஸ்திரங்கள் கூறுகின்றன. வருடத்தில் ஒரு நாளாவது கோபூஜை செய்தல் வேண்டும்.

பாற்கடலிலிருந்து காமதேனு தோன்றினாள். அவளுடைய ஸந்ததி இருக்கும் லோகம் “கோ” லோகம் எனப்படும். ராதா கிருஷ்ணர் அங்கு கோக்களுடனும் கோபிகைகளுடனும் ஆனந்தமாக வசிக்கின்றார். அந்த கோக்களின் பாலினாலும் நெய்யினாலும் வேதமந்திரத்தைக் கூறி யாகம் செய்கின்றனர். யாகத்தினால் மழை, மழையால் உலக க்ஷேமம் உண்டாகிறது.

அதுவும் உத்தராயண புண்ணியகால ஆரம்பத்தில் செய்வது உத்தமமென்பதாலேயே மறுநாள் இதனைக் கொண்டாடி வருகின்றனர். உழவர்களுடைய உழைப்புக்கும் உவகைக்கும் உறுதுணையாக இருந்த மாடு கன்றுகளையும் கூட அவர்கள் மறந்து விடுவதில்லை. அவர்களுக்குப் பெருந்துணையாக இருந்த அவற்றுக்காக ஒரு நாளைத் தனியாக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அந்த நாளை அவர்கள் மிகவும் குதூகலமாகக் கொண்டாடுகின்றார்கள்.

மாட்டுப் பொங்கலன்று உழவர்கள் மாடுகளை மிகவும் விசேஷமாகப் போஷிக்கின்றார்கள். அவற்றின் கொம்புகளையும் சீவிச் சுத்தப்படுத்துவர், நன்கு தேய்த்துக் குளிப்பாட்டுவர், மஞ்சள், சந்தனம், குங்குமம் முதலான மங்கலப் பொருள் அணிவித்து பூஜித்து மகிழ்வர். பின்னர் சுத்தம் செய்யப்பட்ட மாட்டுத் தொழுவத்திலே அவற்றைக் கொண்டு சேர்ப்பர். அங்கு பொங்கல் பொங்குவர். பொங்கிய பொங்கலை மாடுகளைப் புசிக்கச் செய்வர். காளையை கட்டும் ஜல்லிக்கட்டு திருவிழா என்றும் ஒரு விழா உண்டு. இன்றும் இம்முறை பல இடங்களில் நடந்து வருகின்றது.

கோமாதா

பகவானுடைய அபிஷேகத்திற்கு பால் முதலியவைகளும் பசுக்களிடமிருந்து கிடைக்கின்றன. உயிருக்கும் உபயோகமான பசுவைப் போல் உதவுகிறவள் தாய் ஒருத்தியே! ஆதலால் கோமாதா எனப்படுகிறாள்.

The post மாட்டுப் பொங்கல் சிறப்பு | mattu pongal tamil appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

ஆருத்ரா தரிசனம் | aaruthra tharisanam in tamil
ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன ?

மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி கழிந்து பௌர்ணமி ஆதிரைத் திருநாள் சிதம்பரம் நடராஜ பெருமானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். விசேஷமாக அன்று களி, எழுகறிகூட்டு செய்து பகவானுக்கு நெய்வேத்தியம் செய்வது வழக்கம்.

ஆருத்ரா தரிசனம் வரலாறு

பக்தரை சோதனை செய்ய வேண்டி சிவபெருமான் கிழ வேடம் தரித்து, அவர் அளித்த களியை உண்டு (களித்ததாக கதை உண்டு. அதனால் தான் அன்றைய தினம் சிவனுக்கு களி நெய்வேத்தியம் செய்வது வழக்கமாகி விட்டது. களி என்றாலே ஆனந்தம் என்பர், திருவாதிரை “ஒருவாய்த் களிதின்காவர் நரசக்குழி” என்பார்கள்.

திருவாதிரைத் திருவிழா நடைமுறை மார்கழி ஆருத்ரா தரிசன விழா பத்துநாள் பெருவிழாவாக நடைபெற்று வருகின்றது. முதல் நாள் கொடியேற்று விழா, கொடியேற்றத்தன்று மாணிக்கவாசகரை எழுத்தருளச் செய்வர். அவர் திருமேனிக்கு அபிஷேகம், அலங்காரம், நிவேதனம் யாவும் முறைப்படி செய்வர். இதனையடுத்துத் திருவெம்பாவை இருபது பாடல்களையும் ஓதி, ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு தீபாராதனை செய்து வழிபாடு செய்வர். தேவாரம் முதலிய இதர திருமுறைகளுக்குத் திருக்காப்பிட்டுத் திருவெம்பாவை மட்டும் ஓதுவர். பிறகு இரண்டாம் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளிலும் விழாக் கொண்டாட்டங்கள் நடைபெறும். திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானுக்கு மிகச்சிறப்பாக அபிஷேகம் நடைபெறும். உமையம்மை கண்டு மகிழ இறைவன் திருக்கூத்தாடியதால் நாமும் அந்த நாளில் கூத்தனின் மகா தரிசனத்தைக் கண்டு மகிழ்கின்றோம்.

The post ஆருத்ரா தரிசனம் | aaruthra tharisanam in tamil appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

தைபூசம் திருவிழா | தைப்பூசம் என்றால் என்ன
தைப்பூசம் என்றால் என்ன ?

பூசம் என்பது 27 நட்சத்திரங்களுக்கும் எட்டாவதாக வருகின்ற நட்சத்திரமாகும். ஒவ்வொரு மாதத்திலும் ஒரு நாள் பூச நட்த்திரமாக வருவது இயல்பதான். ஆனால் பூசநட்சத்திரம் முழுநிலவு நாளில் (பௌர்ணமி நாளில் கூடிவருவது தை மாதத்தில்தான். ஆதலால் இதனைத் தைப்பூசம் என்று சிறப்பித்துக் கூறுவர்,

தைப்பூசத் திருவிழா சிறப்பு

தைப்பூசவிழா சிவன் கோயில்களிலும் முருகன் கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பத்துநாள் பெருவிழாவாக பிரம்மோற்சவமாக கொண்டாடப்படும் சிறப்புடைய சைவசமய விழாக்களுள் இதுவும் ஒன்றாகும். பூர் நட்சத்திரத்திற்கு ஒன்பது நாள் முண்பாக விழாத் தொடங்கப்படும். பூசத்தன்று புண்ணிய ஆறுகளில் நீராடல் செய்து விழாவை நிறைவு செய்வது நீண்ட காலமாகப் பின்பற்றப்படும் மரபாகும்.

பூசநீராட்டு விழா நடைபெறும் தலங்களுள் குறிப்பிடத்தக்க தலமாக விளங்குவது தஞ்சை வட்டத்திலுள்ள திருவிடை மருதூர் என்னும் தலமாகும்.
“பூசம் புகுந்தாடிப் பொலிதழகாய
ஈசன் உறைகின்ற இடைமரு தீர்தா”

என்று இவ்விழாவைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். மேலும், இவரே, இறந்து போன் பூம்பாவை என்னும் பெண்ணை உயிர்பெறச் செய்வதற்காக பாடிய திருப்பதிருத்தில்

“தைப்பூசம் காணாது போதியோ பூம்பாவாய்”

என்று பாடியுள்ளார்.

இதிலிருந்து தைப்பூச விழா தமிழ் நாட்டில் பலநூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மனுவின் மகன் இரணியவர்மனுக்கு விசன் தரிசனம் கொடுத்ததும், புத்தர் ஞானோதயம் பெற்றதும் இந்த தைப்பூச நன்னாளில் தான்.

வியாழன் என்பது நவகிரகங்களுள் ஒன்று, வியாழன் தேவர்களின் குருவாகப் போற்றப்படுகின்றார். வியாழன் பூசநட்சத்திரத்தின் அதிதேவதை. இவர் அறிவினை உண்டாக்கும் வலிமை பெற்றவர். பூசநாளில் இவரை வழிபட்டால் இவரது அருள் கிடைக்கும்.

The post தைபூசம் திருவிழா | தைப்பூசம் என்றால் என்ன appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

ரதசப்தமி | ratha saptami in tamil
ரதசப்தமி

தை அமாவாசையை அடுத்த ஏழாம் நாள் ரதசப்தமி பண்டிகை. அன்று சூரியபகவாளின் தேர் மேற்கே திரும்புவதாக ஐதிகம். அன்று சுமங்கலிகள் ஏழு எருக்கம் இலைகளை அடுக்கி வைத்து அதில் சிறிது அட்சதை வைத்து தலையில் வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும் என்பதாக ஐதீகம். பெற்றோர் உள்ள ஆண்கள் இலையில் அட்சதை மாத்திரம் வைத்துக் கொண்டு ஸ்தானம் செய்ய வேண்டும். பெற்றோர் இல்லாத ஆண்கள் எருக்கத்தழையுடன் எள்ளை வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். அன்று பூஜை அறையில் தேர்க்கோலம் போட்டு, காவி இட்டு, சர்க்கரைப் பொங்கல், வடை நைவேத்தியம் செய்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.

ரதசப்தமி பலன்

ரதசப்தமி நாளில் ஏழு எருக்கன் இலைகளை தலைமீது வைத்து அப்பெருமானை துதித்து நீராடினால் எழு ஜன்மங்கள் பாவம் அகலும் என்பது மரபு.

The post ரதசப்தமி | ratha saptami in tamil appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

சிவராத்திரி பலன் வளம் தரும் ஐந்து வகை சிவராத்திரி
சிவராத்திரி ஐந்து வகைப்படும்

1.நித்ய சிவராத்திரி

2.பட்ச சிவராத்திரி

3.மாத சிவராத்திரி

4.யோக சிவராத்திரி

5.மஹா சிவராத்திரி

1.நித்ய சிவராத்திரி

ஒவ்வொரு சதுர்த்தசியிலும் சிவ பூஜை செய்து ஒரு வருடத்தில் 24 சிவபூஜை புரிவது நித்ய சிவராத்திரி எனப்படும்.

2.பட்ச சிவராத்திரி

தைமாத கிருஷ்ண பட்ச பிரதமை முதல் பதிமூன்று நாட்கள் நித்யம் ஒரே வேளை பூஜித்து சதுர்த்தசியில் பூஜை செய்வது பட்ச சிவராத்திரி.

3.மாத சிவராத்திரி

1.மாசி கிருஷ்ண சதுர்த்தசி
2.பங்குனி முதலில் வரும் திருதியை –
3.சித்திரை கிருஷ்ண அஷ்டமி –
4.வைகாசி முதல் அஷ்டமி
5.ஆனி சுக்ல சதுர்த்தி –
6.ஆடி கிருஷ்ணா பஞ்சமி
7.ஆவணி சுக்ல அஷ்டமி –
8.புரட்டாசி முதல் த்ரியோதசி –
9.ஐப்பசி சுக்ல துவாதசி
10.கார்த்திகை முதல் சப்தமி அஷ்டமியும் –
11.மார்கழி இரு பட்ச சதுர்த்தசிகள்:-
12.தை மாத சுக்ல திருதியை இவை மாத சிவராத்திரி .

4.யோக சிவராத்திரி

சோம வாரத்தன்று அறுபது நாழிகையும் அமாவாசை இருந்தால் அது யோக சிவராத்திரி.

5.மஹா சிவராத்திரி

மாசி கிருஷ்ண சதுர்த்தசி மஹா சிவராத்திரி, சிவபெருமான் சிவராத்திரியின் மகிமையை நந்திதேவருக்கு உபதேசித்து அருளினார். நத்திதேவர் சிவராத்திரியின் மஹாத்மியத்தை எல்லா தேவர்களுக்கும், கணத்தவர்களுக்கும் முனிவர்களுக்கும் உபதேசித்து அருளினார். இத்தகைய சிவராத்திரி விரதத்தை பிரம்மதேவர், திருமால், பார்வதி, ஆதிசேஷன், சரஸ்வதி அனுஷ்டித்துள்ளனர்.
ஒரு சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பது நூறு ஏகாதசி விரதம் அனுஷ்டித்த பலனைக் கொடுக்கிறது என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்போர்க்கு காசியில் முக்தி அடைந்த பலன் கிட்டுகிறது.

The post சிவராத்திரி பலன் வளம் தரும் ஐந்து வகை சிவராத்திரி appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

சனி பிரதோஷம் | Sani Pradosham
சனி பிரதோஷம்

சனி கிழமைகளில் வருமானால் சனி பிரதோஷம் என்று அழைக்கப் படுகின்றது இதுவே சனிக் பிரதோஷ காலம் என்பது சூரியன் மறைவதற்கு முன்பு 3 3/4 நாழிகையும், சூரியன் பறைத்த பிறகு 3 3/4 நாழிகையுமாகும் (அதாவது மாலை 4-30 மணி முதல் 7-00 மணி வரையாகும்).

பிரதோஷ காலத்தில் சோமசுத்ர முறையில் ஆலயங்களை பிரதட்சணை செய்ய வேண்டும். பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவதற்கு முன்னர் துக்கத்தை போக்குவோரான நந்திகேஸ்வரரை வழிபட வேண்டும். தேவர்கள் தங்கள் குறைகளை களைய சிவபெருமானை அணுகும்முன் நந்திகேஸ்வரரை அணுகினர்.

சனி பிரதோஷம் விரதம் பலன்கள்

அதைபோல பிரதோஷ தினத்தன்று மாலை வரை உபவாசம் இருந்து சிவ நாமங்களை ஐபித்து நந்திகேஸ்வரரையும் அதன்பின் சிவபெருமானையும் வழிபட்டு சகல ஐஸ்வர்யங்களுக்கும் பாத்திரர் ஆகுவோம்.

The post சனி பிரதோஷம் | Sani Pradosham appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

மாசி மகம் | masi magam in tamil
மாசி மகம்

மாசி மாதத்திலே வரும் மக நட்சத்திரத்தோடு கூடிய புண்ணிய காலம் மாசி மகம் எனப்படும். முன் ஒரு காலத்தில் ஓர் கொடிய அரசனை வெல்வதற்கு உபாயம் கேட்டு வந்தவரை புகைவன் என நினைத்து வருனன் தன் பாசத்தை அவன் மேல் வீசி இறக்க செய்தான். இத்தவறான செய்கையினால் வருனன் சமுத்திரத்தின் உள்ளே நெடுங்காலம் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

மண் உலகத்தாரும் விண் உலகத்தாரும் சிவபெருமானிடம் வருனனின் துன்பத்தை நீக்கி அருள பிராத்தித்தனர். மாசி மாதம் மக நட்சத்திர தினத்தில் வருனனின் துன்பத்தை நீக்கி அருள் செய்தார் சிவபெருமான் ஆகவே இத்தினத்தில் சமுத்திரத்தில் நீராடினால் துன்பம், பாவங்கள் நீங்கும். மாசி மகதினத்திலே சமுத்திரத்தில் நீராடுபவர்களுக்கு இறைவன் பாவத்தை நீக்கி அவர்களுக்கு முக்தியை கொடுத்து அருளுவதாக ஐதீகம்.

மாசி மகம் சிறப்பு

மாசி மகத்தில் குரு சிம்ம ராசியில் சேரும் காலம் புண்ணிய காலமாக கருதப்படுகிறது. இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழ்கிறது. செய்த பாவங்களை போக்கிக் கொள்ள புண்ணிய க்ஷேத்திரம் காசிக்கு செல்வோம் என்பர். காசியில் உள்ளவரே பாவம் செய்தால்
“காசி க்ஷேத்ரேகுருதம் பாபம் கும்பகோனே விநச்யாதி”  காசியிலே இருக்கிறவர் பாவம் செய்தால் கும்பகோணத்திற்கு போனால் தான் போகும்.

“கும்பகோணக்ருதம் பாபம் கும்பகோணே விநச்யாதி” கும்பகோணத்தில் செய்யும் பாவம் கும்பகோணத்தில் தான் போக வேண்டும் என்று பரமாச்சாரியர்கள் கூறுவார்கள். எனவே பாபவிமோசன தலமான கும்பகோணத்தில் இருக்கும் மகாமக தெப்ப குளத்தில் மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியில் சேரும் காலமான மகாமக தினத்தில் புனித நீராடினால் செய்த பாவங்கள் அனைத்திற்கும் விமோசனம் கிட்டும்.

The post மாசி மகம் | masi magam in tamil appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

Rama navami in tamil | ராம நவமி ராமர் பிறந்த தினம்
ஸ்ரீ ராம நவமி

ராம நவமி என்றால் என்ன ?

இப்பண்டிகை பங்குனி புனர்பூச நட்சத்திரத்தில் நவமி திதியன்று வரும். (சிலசமயம் சித்திரை மாதத்திலும் வரலாம்) இது ஸ்ரீ ராமர் பிறந்த தினத்தை கொண்டாடும் நாள். இதை இந்தியா முழுவதும் கொண்டாடுகிறார்கள். வடஇந்தியாவில் நவமிக்கு எட்டு நாட்களுக்கு முன்பே “அகண்ட ராமாயணம்” என ஆரம்பித்து, விடாமல் தொடர்ந்து துளசி ராமாயணம் வாசிப்பார்கள். அவர்கள் பாடும் ராகங்கள் கேட்க காதுக்கு மிகவும் இனிமையாக இருக்கும்.

தென்னிந்தியாவில் ஸ்ரீராம நவமி உற்சவத்தை பத்து தினங்கள் கொண்டாடுவார்கள். சிலர் நவமியன்று விரதம் இருப்பது வழக்கம். சிலர் ஸ்ரீராமர் பிறந்த தினத்தை பண்டிகையாகக் கொண்டாடுவார்கள். ஸ்ரீராமர் பட்டாபிஷேக படத்தை பூஜை செய்து, வருடப் பிறப்பன்று செய்வது போல் வடை பருப்புநீர்மோர், பானகம், பாயஸம் செய்து வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.

ஒன்பது நாட்களும் அல்லது ஸ்ரீராம நவமியிலாவது பூஜை செய்ய வேண்டும். தமிழகத்தில் அனைத்து வைஷ்ணவ ஆலயங்களில் ராம நவமி உற்சவம் பத்து நாட்கள் வெரு விசையால் கொண்டாடுகிறார்கள், வைனவ திருக்கோயில்களில் ஸ்ரீராமநவமி உற்சவத்தை கர்ப உற்சவம் என ஸ்ரீராமநவமி அன்றுடன் முடியும் வண்ணம் பத்து நாட்கள் கொண்டாடுகின்றனர். மற்றைய திருக்கோயில்களில் ஸ்ரீராமன் பிறந்த ஸ்ரீராமநவமி அன்று உற்சவம் ஆரம்பித்து பத்து நாட்கள் கொண்டாடுகின்றனர். இது ஜனன உற்சவம் என்று அழைக்கின்றனர். இதில் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம் என விஷேசங்களை கொண்டாடுகின்றனர்.

The post Rama navami in tamil | ராம நவமி ராமர் பிறந்த தினம் appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.